அன்புள்ள ஜெ
பீஷ்மர் படுகளத்தில்
வீழ்ந்தபோது பாண்டவர்களின் நடத்தை மிக நுட்பமானது. அதைசெய்யக்கூடாது என சொல்லிய பீமன்
தான் அதிக வருத்தம் படவில்லை. அந்தப்போரை அதைப்பயன்படுத்திக்கொண்டு வெற்றிகரமாக நடத்திவிடவேண்டும்
என முடிவுசெய்கிறான். ஆனால் அதைச்செய்ய அனுமதிகொடுத்த யுதிஷ்டிரர் கதறி அழுகிறார்
அதேபோல பீஷ்மர்
கொல்லப்பட்டபோது கதறி அழுத பாண்டவப்படைகள் போர் மீண்டும் எழுந்ததும் அந்த சாவின் இன்னொரு
பக்கத்தை அறிகிறார்கள். அவர்களை கொன்றொழித்த பெரிய சக்தி இல்லாமலாகிவிட்டது. இனி அவர்கள்
எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. அந்த வெற்றியை அவர்கள் குரூரமான போர்வெறியாக மாற்றிக்கொள்கிறார்கள்.
அப்படியே சென்று அதன் உச்சத்தில் பீஷ்மரை அவமதிக்கவும் செய்கிறார்கள்
மூதாதையைக் கொலைசெய்தல்
என்ற ஒற்றை வரி வழியாக எவ்வளவு வண்ணவேறுபாடுகளை இந்தக்களத்திலேயே காணமுடிகிறது என்பது
ஆச்சரியம்தான்
ராம்