அன்புள்ள ஜெயமோகன் சார்,
வெண்முரசில் நிறைய இடங்களில் சிதில் பற்றி வருகிறது. முதன் முதலில் முதற்கனலில் கவிஜாதன் பரீட்சித்திற்கு குருசேத்திரத்தை
அறிமுகப்படுத்தும்போது பரீட்சித்,அங்கு மடிந்த அனைத்தும் கோபுரங்கள் போல் சிதில்புற்றுகளாக உருமாறியிப்பதையும் மண் குடல் போல் செரித்துகொண்டிருப்பதையும் காண்கிறான். அப்போது இந்த வாக்கியம் மிகவும் கற்பனையை கிளறியது. ஏனென்றால் இது ஒரு அழிவை குறிக்கிறது. காலம் தனக்கு முன்னால் நிற்கும் எதையும் அழித்து செரிக்கிறது.எனக்கு அழிவு என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும்.ஆனால் அது கோழையின் இயலாதவனின் அச்சமூட்டுவனின் சொல். ஆனாலும் நம்மால் எதிர்த்தே நிற்கமுடியாத காலதேவனின் சொல்லும் அதுவே.
சாதாரணமாக நம்மைவிட்டு கடந்து செல்லும் பொருட்களோ நம் மனதை தீண்டாத நாம் கொஞ்சமும் நேசம் வைக்காத எதுவும் சிதல்களுக்கு இரையாவதை காண்கையில் நம்மை ஒன்றும் செய்வதில்லை. நாம் மிகவும் நேசித்த ஓன்று கரையான் அரித்து கிடப்பதை பார்த்தால் மனம் திடுக்கிடுகிறது.அது நீ நேசிக்கிற நீ விரும்புகிற அனைத்தும் செரித்து போகும் என கூறுவதைப்போல் இருக்கிறது.அது நாம் விரும்பி படித்த புத்தகமாக இருக்கலாம், நாம் நேசித்த முன்னோரின் உடமைகளாக இருக்கலாம்,சில நேரத்தில் நாம் நேசித்தவர்களின் சடலமாககூட இருக்கலாம்.முக்கியமாய் நம் இளமையாக இருக்கலாம்.
இன்று துண்டிகன் தான் நேசித்த ஆடையை தொலைத்துவிட்டு அழுது தேடி,ஆயிரத்தை அள்ளிகொடுக்கும் புற உலகில் புதியவனாக பிறந்து அதை மறந்தே போகிறான்.கொஞ்சநாள் கழித்து சிதில் அரித்து கிடக்கும் அந்த அந்த ஆடையின் வடிவை பார்த்து அதை உடைக்க உள்ளே சிதில்கள் ஓடிகொண்டிருக்கின்றன. உயிருள்ள சீழ். புத்தம் புதிதாய் நமக்கு கிடைக்கும்போதே மாயவடிவில் உள்ளே இருக்கும் காலம்
ஸ்டீபன்ராஜ் குலசேகரன்