Wednesday, November 28, 2018

விலங்குகள்


ஜெ

போரின் குரூரமான காட்சிகள் ஒவ்வொன்றும் நம் மனதில் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. ஒருசமயம் அனைவரும் அதில் சிக்கிக்கொண்ட எளிய மனிதர்களாகத் தெரிகிறார்கள். இன்னொரு சமயம் அனைவருமே அவர்களுக்குள் இருக்கும் குரூரங்கள் வெளியே வந்தமையால் குரூரமான விலங்குகளாக ஆகிவிட்டவர்கள் போலத் தோன்றுகிறார்கள். காமத்துக்கும் போருக்கும் பயிற்சிதேவையில்லை என்று கிருபர் சொன்னதாக வரும் வரி அதைத்தான் குறிக்கிறது. மிகுந்த மனச்சோர்வூட்டும் வரி அது

நான் வடக்கே [கான்பூர்] இருந்தபோது நிகழ்ந்த பெரிய மதக்கலவரங்களைக் கண்டிருக்கிறேன். அத்தனைபேரையும் கொடிய விலங்குகளாகவே நினைக்கத்தோன்றுகிறது. எல்லாரும் நல்ல மனிதர்கள்தான். அந்தச்சமயத்தில் விலங்குகளாக ஆகிவிடுகிறார்கள்


எம்.நஞ்சுண்டன்