Wednesday, November 28, 2018

சக்கரம்




 ஜெ

பீஷ்மரின் மறைவின்போது ஆழமான வருத்தம் ஏற்பட்டது. மகாபாரதத்திலேயே பீஷ்மரும் கர்ணனும்தான் விதியின் பலிகள். அவர்களுக்கு இல்லாத தகுதிகள் இல்லை. ஆனால் வெவ்வேறு நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கையில் எதையுமே அடையாமல் இறந்தார்கள். அவர்கள் இருவருமே மோசமான முறையில் கொல்லப்பட்டார்கள். பீஷ்மரின் இறப்பை நோக்கும்போது அவருடையது நான் நேர்மையானவன் என்ற ஆணவத்தால் வந்த பலி என்ற எண்ணமும் ஏர்படுகிறது


அவர் அர்ஜுனனால் கொல்லப்படவில்லை. கிருஷ்ணனின் சக்கரத்தால் கொல்லப்பட்டார். இங்கே அந்த சக்கரம் சிகண்டி

சந்திரசேகர்