அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம் .சிகண்டி சிதை எரிப்பதை எவ்வித தயக்கமும் இல்லாமல் செய்கிறார்.தன் தாய் அம்பை உயிருடன் சிதை ஏறுவதை நேரில் கண்டவருக்கு. உயிரில்லா உடல்களை சிதை ஏற்றுவது ஒன்றும் சிரமம் இல்லை அல்லவா.அல்லது சிதை எரிவதை கண்டு தன் வஞ்சம் அணையாமல் பார்த்து காெள்கிறாரா.?
பிஷ்மர் இமைகணத்தில் சிவனாக வருவார். பாேற்களத்தில் அவரை விட்டு நீங்கும் அஷ்ட வசுக்களை .சிவனின் அஷ்டமூர்த்திகளாக பார்க்கலாம் அல்லவா?.அவரை திரிபுரம் ஏரிக்கும் ஆடல்வல்லான் என்றே திசை தேர் வெள்ளம் விவரிக்கிறது அம்பை தாட்சாயினி உடன் தெடர்பு காெண்டவலாகவே
வருகிறாள்.அப்படியென்றால் பிஷ்மர்: அம்பை கதையை ஆண் பெண் உறவு சிக்கல் என்று தனியே வாசிக்கலாம் அல்லவா?
இப்படிக்கு
த.குணசேகரன்.
அன்புள்ள குணசேகரன்
இது கோலம்போடுவதுபோலத்தான். புள்ளிவைப்பதுபோல ஆசிரியரின் ஆழுள்ள்த்திலிருந்து சில மின்னல்கள். அவை படிமங்களாக, நிகழ்வுகளாக, கருத்துக்களாக, உரையாடல்களாக வெளிப்படுகின்றன. அவற்றை கொஞ்சம் அவரே இணைத்துக்கோடுபோட்டிருப்பார். எஞ்சியவற்றை வாசகர்கள்தான் இணைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு தன் கற்பனையையும் சிந்தனையையும் பயன்படுத்தவேண்டும். அதுவே வாசிப்பின் முழுமை
ஜெ