Monday, November 19, 2018

மழைப்பாடல் முதல்...



ஜெ

மழைப்பாடலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நீங்கள் கோவித்துக்கொள்ளக்கூடாது. சம்பந்தமே இல்லாமல் நான் திசைதேர் வெள்ளம்தான் வாசிக்க ஆரம்பித்தேன். இங்கிருந்து பின்னால்சென்று முதற்கனல். அடுத்து மழைப்பாடல். இப்போதுதான் மழைப்பாடலின் முழுவடிவமும் புரிகிறது. மகாபாரதப்போரை உருவாக்கிய அடிப்படைச் சக்திகளின் விசைகள் என்ன, என்னென்ன சக்திகளால் அந்தப்போர் உருவானது என்பதெல்லாம் தெரிகிறது. எளிமையான மனிதப்பிரச்சினைகளும் நிலங்களுக்கு இடையே உள்ள மோதல்களும் தெய்வங்களின் மோதல்களும் ஒன்றாகச்சேர்ந்து இந்தப்போரை உருவாக்குகின்றன. துர்வசுவை யயாதி பாலைவனத்துக்கு அனுப்பியபோதே மகாபாரதப்போர் ஆரம்பித்துவிட்டது. உண்மையில் இது யயாதியின் மைந்தர்கள் நடுவே நடக்கும் போர்தானே?

ராஜ்குமார் செல்வா