Thursday, November 22, 2018

படிமங்கள்



ஜெ

வெண்முரசின் கதை ஒரு ஓட்டம் என்றால் இதில் படிமங்கள் வழியாகவே சொல்லப்படும் இன்னொரு ஓட்டம் தனியாக உள்ளது. இரண்டும் பிணைந்துள்ளன. ஆகவே படிமங்கள் கதைக்குள் ஒரு வகையான வர்ணனைகளாகவே வந்துசெல்கின்றன. அல்லது கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களாக உள்ளன. அவற்றை கதையோட்டத்தின் பகுதிகளாகவோ அல்லது கதையை தடுக்கும் வர்ணனைகளாகவோ பார்க்கும் வாசகர்கள் வெண்முரசை 90 சதவீதம் இழந்துவிடுகிறார்கள் என்பதே என் கணிப்பு.

இன்றைய அத்தியாயத்தில் வரும் சிதல் தொடர்ச்சியாக வெண்முரசில் வளர்ந்துவந்துகொண்டே இருக்கும் ஒரு படிமம். அதன் சுறுசுறுப்பும் பசியும் சொல்லப்பட்டுள்ளது. சீழின் மணம் இப்போது வந்திருக்கிறது. அது எல்லாவற்றையும் உண்டு அதேபோன்ற ஒரு ந்கலை உருவாக்குகிறது. அது அபாரமான ஒரு படிமம்

இந்தப்படிமங்கள் எதை சுட்டிக்காட்டுகின்றன என்று யோசிப்பவர்களுக்கும் வெண்முரசு பிடிகிடைப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்தப்படிமங்களின் கவித்துவத்தை அனுபவமாக ஆக்கிக்கொள்பவர்கள் மட்டுமே இலக்கிய அனுபவமாக இந்த காவியத்தை அடைகிறார்கள்

ரகுநாதன்