Monday, November 12, 2018

நீலம்

அன்புள்ள ஜெ..

சில மாதங்களுக்கு முன் “ நீலம் “ நாவல் ஒன்றும் பிடிபடவில்லையே... அது வெண்முரசு தொடரில் பொருந்தாமல் தனித்து இருப்பதாக தோன்றுகிறதே என உங்களுக்கு எழுதி இருந்தேன்,,

ஆனால் இன்று என்னைக் கேட்டால் மனதுக்கு நெருக்கமான நாவல் என்று கூறுவேன்.

உலக வரலாற்றில் இத்தனைபேர் ஒன்றாக ஒரு நேரத்தில் ஒரு நாவலை படிப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். மாபெரும் கூட்டு வாசிப்பு என்பது சாத்தியமாகும் கால கட்டத்தில் ஒரு சாட்சியாக இருப்பதை ரசிக்கிறேன்.

ஆனால் நீலம் நாவல் , மிகவும் அந்தரங்கமானது என நினைக்கிறேன். அதை புத்தக வடிவில் படிக்கும்போதுதான் அதன் கதவுகள் எனக்கு திறந்தன...  அதுவும் செம்பதிப்பில் படிப்பது அழகான ஓர் அனுபவத்தை கொடுத்தது..

என்று நீ ,, அன்று நான் என்ற வரிகள் என் நினைவுக்கு வந்தன.. உன்னைப்போல நானும் அனாதி.   நீ எப்போது தோன்றினாயோ அப்போதே நானும் தோன்ற்இ உன்னை ஆராதித்திக்கொண்டே இருக்கிறேன் என்பது ஓர் உணர்வு..

பிச்சைக்காரன்