ஜெ
தர்மக்ஷேத்திரம்
என்றும் குருக்ஷேத்திரம் ஏன் சொல்லப்படுகிறது என்று முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்
விளக்கிச் சொல்லும் ஒர் உரை உண்டு. அதிலே அவர் குருக்ஷேத்திரம் நடக்காத இடம் பூமியில்
இல்லை. அது நடக்காத பொழுதும் கிடையாது. ஆனால் அது ஞானக்கண்ணுக்குத் தெரிந்த இடம் குருக்ஷேத்திரநிலம்.
ஆகவே அது தர்மக்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது என விளக்குகிறார். இன்றைய அத்தியாயத்தி
சஞ்சயன் தெய்வங்கள் அனைத்தும் போரிட்டுக்கொண்டிருக்கும் மாபெரும் களமாக குருக்ஷேத்திரத்தைப்
பார்க்கும்போது அந்த உபன்னியாசத்தை நினைத்துக்கொண்டேன். கவித்துவமாக குருக்ஷேத்திரம்
விரிந்துவிட்டது
சுவாமி