ஜெ
நான் இப்போதுதான் பிரயாகை வாசித்தேன். முன்னர் வாசிக்கவில்லை. இப்போது வாசித்ததனால்தான் பாஞ்சாலி கடைசியில் ஒரு திரி தீயை கொண்டுசென்று கோயிலில் விளக்கேற்றுவதற்காக மொத்தக் காட்டையும் கொளுத்திவிடுவதன் அர்த்தம் என்ன என்று புரிகிறது. காண்டவவனம் எரிவதை அது குறிக்கிறது. அதைவிடவும் மகாபாரதத்தின் பெரியபோரைத்தான் குறிக்கிறது என நினைக்கிறேன். அவள் எரித்த தீதான் இப்போது குருக்ஷேத்திரத்தில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் சிற்றுயிர்கள் எரிந்து அழிகின்றன. அவள் சுடரை ஏற்றுவாள். அதைத்தான் மண்டை ஓடு ஏந்தி வந்த அந்த காபாலிகர் சொல்கிறார்
ராஜா குமரவேல்