Saturday, November 17, 2018

சாவேறு




ஜெ,

   
பாரதவர்ஷத்தில் அதுவரை அத்தகைய போர்கள் நிகழ்ந்ததில்லை.     நெடுங்காலமாகவே உரிமைப்போர்கள்நாற்களத்திலோ  சேவற்களத்திலோ  சாவேற்றப்படையினர் பொருதும் களரியிலோ தீர்க்கப்பட்டன. - ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பதுதிசைதேர் வெள்ளம்-53


சாவேற்றப்படை என்றால் என்ன? சாவை (விரும்பி) ஏற்ற தற்கொலை படை என்று கூறலாமா? 
முக்காலமும் அறிந்த கூகுலானந்தா (கூகுல் பாபா என்ற பெயரும் உண்டு) வெண்முரசின் சில சொற்களை கண்டு செய்வதறியாமல் திகைத்து நின்றுவிடுகிறார். இம்முறையும் அதுவே நிகழ்ந்தது!!
நன்றி

கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

அந்தச்சொல் சோழர் காலத்தையது. மலையாளத்தில் இன்றும் புழக்கத்திலுள்ளது. சாவேற்றுக்கொள்வோர் என்று பொருள். 

ஜெ