Sunday, November 25, 2018

பீஷ்மர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

மலைகளில் பிறவிகொண்டு சமவெளிக்கு வந்த கங்கை,அதிகாரபோட்டிக்கு வந்து விடக்கூடாது என்பதினால் அம்புகளைகொண்டு அணைகட்டி நிறுத்தப்பட்ட கங்கை,  அம்பை,அம்பிகை,அம்பாலிகை என்னும் மூன்று பெண்களை அழைத்துக்கொண்டு வரும்போது படகின் அமரத்தில் தனிமையில் நின்று கொண்டிருந்த கங்கை, ரகசியமாய் கங்கைகளால் நுகரப்பட்டால் அரண்மனை  தாங்காது என்பதினால் துரத்தி துரத்தி அடிக்கப்பட்ட கங்கை, அறம் என்றும் மறம் என்றும் வேதம் என்றும் குலம் என்றும் குருதி என்றும் நான்கு தலைமுறைகளாய் ஓடிய கங்கை, எது தனது வாழ்நாளில் நடந்து விடக்கூடாது என நினைத்ததோ அதை காட்டாறாய் ஆர்ப்பரித்து நடத்திவிட்டு இன்று ஒரு மெல்லிய சிற்றோடையின் முன் சிற்றோடையாய் நிற்கிறது.

ஆயிரம் மாசுகள் அதன் உள்ளே இருந்தாலும் இல்லை அதை உலகம் மாசுபடித்தினாலும் அது நிற்பதே இல்லை. செயல் மட்டுமே அதன் பணி. 

ஷத்ரியனின் உச்சபட்சம் பீஷ்மன் தான்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்