Monday, November 12, 2018

ஆசி



ஜெ

சஞ்சயன் சொல்லும் போர்க்காட்சியை வாசித்துமுடிக்கவே ஒருநாள் ஆகியது. நிறுத்தி நிறுத்தி எதையும் விட்டுவிடக்கூடாது என்றே வாசித்தேன்

மகாபாரதப்போரிலேயே எடைமிக்க ஆயுதம் பால்ஹிகர் வைத்திருக்கும் அந்தப்பெரிய கதாயுதம். அதை சஞ்சயன் காணும் மாயப்போரில் ஒரு மென்மையான சாமரம் போல காண்கிறான்

பால்ஹிகரின் கையில் பொற்சங்கிலி ஒன்றில் கட்டப்பட்ட மென்மையான மலர்போன்ற சாமரம் தொங்கியது. அதை சுழற்றிவீசியபடி அவர் அணுகினார். அந்தக் காற்றில் பறந்துகொண்டிருந்த தேவர்களின் பொன்னிறக் குழல்கள் அலைபாய்ந்தன. கந்தர்வர்களின் ஒளிவண்ண ஆடைகள் நெளிந்தமைந்தன. அது வருடிச்சென்ற தெய்வங்கள் மெய்ப்பு கொண்டு புன்னகைத்து அசைவழிந்து நின்றன.

அவர் அந்தப்போரில் ஆசீர்வாதம்தான் அளித்துக்கொண்டே செல்கிறார். அவர் எவரையும் கொல்லவில்லை. அவர் அங்கே நடக்கும் போருக்குச் சம்பந்தமில்லாமல் காற்ற்போல தேவர்களின் தலைமுடிகளை அசைத்தபடி கடந்துசெல்கிறார்


சாரங்கன்