ஜெ
கௌரவர்களின் பிரச்சினை என்ன என்று விசோகனின் பார்வை வழியாக வருகிறது. அவர்களால் ஒட்டுமொத்தமாகவே செயல்பட முடிகிறது. அதாவது மந்தைபோல.அப்படிச் செயல்படும்போது அவர்கள் ஆற்றல்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களில் ஒருவன் செத்தால் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடைந்து கலைந்த மந்தைபோலவே ஆகிவிடுகிரார்கள். அதை பயன்படுத்தித்தான் பீமன் அவர்களைக் கொன்றொழிக்கிறான்.சிங்கம் புலி போன்றவையும் இப்படித்தான் மந்தைகளை கலைத்து வேட்டையாடுகின்றன. நாவல்களில் ஆரம்பம் முதலே இருந்துவரும் கௌரவர்களின் குணாதிசயமே இப்போது போரிலும் வெளிப்படுவது ஆச்சரியமளிக்கும் ஒருமையை காட்டியது
சாந்தகுமார்