Monday, November 19, 2018

கீழ்மையின் தெய்வம்



ஜெ

மகாபாரதப்போரில் ஒன்பதாம்நாள்போர் ஒரு பெரிய சோர்வுநிலை. எவரும் எவரையும் வெல்லப்போவதில்லை என்ற நிலை. உண்மையில் பீஷ்மரின் சாவுக்குப்பின்னரே போர் ஒரு பக்கமாகச் செல்லக்கூடும் என்பது உறுதியாகிறது. அந்நிலையில் ஒரு பெரிய இறுக்கம் உருவாகிறது. அந்த உச்சகட்ட இறுக்கத்திலிருந்து வீரர்கள் விடுபடும் வழி மிக ஆச்சரியமானது. அவர்கள் சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். பின்னர் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஒரே கேலிக்கூத்து

இதை நான் சாவுவீட்டில் பார்த்திருக்கிறேன். கெட்டவார்த்தை ஜோக்குகள் சொல்லி சிரிப்பார்கள். பெரும்பாலும் அடக்கம் முடிந்த மறுநாள் இரவில். நெருக்கமானவர்கள்கூடச் சிரிப்பார்கள். அந்த காட்சி ஆச்சரியமானதாக இருக்கும். ஆனால் மனிதர்க்ளுக்கு வேறுவழியில்லை அல்லவா? கீழ்மையின் தெய்வம் தோன்றி அவர்களை ஆசீர்வதிக்கிறது


ஜெயராமன்

இந்தவிஷயத்தை நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்