Saturday, November 24, 2018

படைகளின் உள்ளம்





அன்புள்ள ஜெ

படைகளின் மனம் தளர்ந்துவிட்டிருப்பதை வெண்முரசிலே காண்கிறோம். ஆகவே அனைவருமே தூக்கம் நாடுகிறார்கள். தூங்கமுடியாத நிலையில் ஆடிப்பாடி வசைகளைப் பெய்துகொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். போர் என்பது வெளியே நிகழ்வது அல்ல. உள்ளேயும் நிகழ்கிறது. அந்த உளவியல்நெருக்கடிதான் இந்நாவலின் ஆழமான பகுதி என்று எனக்குப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் அந்த உளவியல்நெருக்கடி ஒவ்வொருவகையில் வெளிப்படுவதை வாசிக்க முடிகிறது. பீமன் கூட கொந்தளிப்பும் சோர்வும் கலந்த நிலையில்தான் இருக்கிறான். அவன் அருவருப்புடன் துப்பிக்கொண்டே இருப்பது இப்போதுதான் சொல்லப்படுகிறது


எஸ்.பாலகிருஷ்ணன்