அன்புள்ள ஜெ
பீமனின் பக்தர்கள் வந்துகொண்டே இருப்பதை வாசித்தேன். பீமனின் கையால் கொல்லப்படுவதையே ஒரு பெரிய கொடுப்பினையாக நினைத்து வருகிறார்கள். முன்னர் சங்கன் வந்தது ஞாபகம் வந்தது.
அந்த மனநிலையை நான் பொதுவாக இந்த மல்லர்கள் அனைவரிடமும் கண்டிருக்கிறேன். நான் கர்நாடகத்தில் கொப்பல் என்ற ஊரில் பணியார்றினேன். அங்கே அனுமார்கோயிலில் கட்டைதூக்கும் பயில்வான்கள் உண்டு. குருவுக்காகச் சாகவும் ரெடியாக இருப்பார்கள்
அனுமானின் இயல்பு அது என நினைக்கிறேன். பக்திதானே அனுமார்?
எஸ்.ஆர்.சுப்ரமணியம்