ஜெ
நீலம் நாவலில்
புல்வடிவான அரக்கனை கிருஷ்ணன் கொல்லும் காட்சியை இப்போது அவர் தனக்கு எதிராக நின்றிருக்கும்
யாதவர்களை அழிக்கும் காட்சியுடன் உவமைசெய்துகொண்டேன். குறியீட்டு ரீதியாக அதைத்தான்
சொல்கிறதோ என்ற எண்ணம் வந்தது. யாதவர்களுக்கும் காந்தாரர்களுக்குமான போர் என்றுதான்
மழைப்பாடலில் வருகிறது. ஆனால் இரண்டுபேருமே ஒரே தரப்பில் நின்றிருக்கிறார்கள் இந்தப்போரில்.
ஆச்சரியமான விஷயம் இது
சண்முகம்