அன்புள்ள ஜெ
சக்ரதனுஸின் இறப்பும் கூர்ஜரர்களின் தியாகமும் ஒரு பெரிய மன எழுச்சியை உருவாக்கியது. போர் என்பது இப்படிப்பட்ட பலநூறு சின்னச்சின்ன நிகழ்வுகள், ஆனால் பெரிய தியாயங்கள் மற்றும் பெரிய மனநிலைகளின் தொகுப்பு என்ற எண்ணம் வந்தது. சக்ரதனுஸ் தன் வீரர்களிடம் மனம் திறந்து உண்மையைப் பேசுகிறான். சொல்லப்போனால் உயிர்தப்பி விடுங்கள் என்றுதான் சொல்கிறான். அவன் சொன்ன அந்த உண்மைக்காக அவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள். அதுதான் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இலட்சிய உறவு
பாஸ்கர்