Wednesday, November 21, 2018

கிருஷ்ணனின் முகம்



ஜெமோ

கீதையில் கொல்பவன் நானே என்று கிருஷ்ணன் சொல்கிறான். அந்த வரியை இப்போது பீஷ்மரைக்கொல்ல அவர் திட்டமிடும் இடத்தில் உணரமுடிகிறது. அர்ஜுனனிடம் நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உன் மைந்தனை நிறுத்தி அவரைக் கொல்லவேண்டியிருக்கும் என்று கிருஷ்ணன் சொல்லுமிடம் குரூரமானது. அதோடு மைந்தனுக்கு அந்தப்பழி வந்துவிடக்கூடாது என்பதனால் அர்ஜுனனே அந்தப்பழியை ஏற்றுக்கொள்ளச் செய்வது. கிருஷ்ணனின் அளவற்ற குரூரமும் தந்திரமும் தெரியும் இடம் அது. கிருஷ்ணனை அதையெல்லாம் மீறிச்சென்றுதான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

ஜெயக்குமார்