அன்புள்ள ஜெ
சூதரின் சூச்சுமமான
நையாண்டியை ஒருமுறை வாசித்தபின்னர்தான் புரிந்துகொள்ளமுடிந்தது. பீஷ்மரை கொல்லாமல்
குறிதவறிய அம்புகளால் ஆனது அந்த அம்புப்படுக்கை என்பது. அவர் கங்கையை அம்பால் அணைகட்டியதுபோலத்தான்
இப்போது அவருடைய உயிரை அம்புகளால் அணைகட்டியிருக்கிறார்கள் என்பது
ஆனால் உச்சம் என்பது
அர்ஜுனனை பேடி என்பது. அவருடைய அம்புக்கும் சிகண்டி அம்புக்கும் வேறுபாடே இல்லை என்பது.
பீஷ்மர் ஆணிலியாகிய சிகண்டியின் முன் நிற்கமாட்டேன் என்றார். ஆனால் அர்ஜுனனே ஆணிலியாக
இருந்தவன் தானே என்பது
அவருடைய வரிகள்
எல்லாமே நகைக்கச்செய்தன. ஆண்கள் கல்வியறிவு பெறுவது பெண்களை அழகாக ஆக்குகிறது என்ற
வரியை நினைத்து நினைத்துப்புன்னகைசெய்தேன்
சரவணன்