ஜெ
பீஷ்மரின் படுகளத்தை
அமைப்பதில் ஊழ் எப்படிச் செயல்பட்டது என்பதை அந்தப் போர்க்களத்தையே காட்டிச் சித்தரிந்திருந்தது
பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஆரம்பம் முதலே ஊழ் அந்தப் படுகளத்தை நோக்கி அனைவரையும்
கொண்டுவந்திருந்தது. அத்தனைபேரும் அதில் ஒரு சிறிய பங்களிப்பையாவது அளிக்கிறார்கள்.
அந்தக்களத்திலும் அத்தனை படைவீரர்களும் சேர்ந்துதான் அந்த இடம்நோக்கி கொண்டுவருகிறார்கள்.
அவர்கள் மெல்லமெல்ல அர்ஜுனனையும் பீஷ்மரையும் நகர்த்தி அங்கே சந்திக்கவிடுகிறார்கள்.
எவருக்கும் தெரியாது. அவர்கள் வழியாக ஊழ் அதைச் செய்கிறது. எல்லா தற்செயல்களும் தெய்வச்செயல்கள்தான்
என்ற வரி மெய்சிலிர்ப்பு கொள்ளச்செய்தது
ஆர்.ராமசாமி