சிகண்டியின் மைந்தரைப்பற்றிய
சுருக்கமான குறிப்பு இமைக்கணத்தில்தான் வருகிறது. ஷத்ரதேவன் என்றபேரில் ஒரு மைந்தன்
அவனுக்கு இருப்பதை மகாபாரதத்தின் சில வடிவங்களில் சொல்கிறார்கள். சில நூல்களில் இரண்டு
மைந்தர்கள். வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் ரத்த
உறவைவிட மேலான உருவகித்துக்கொள்ளும் உறவு. அவர்களிருவருக்கும் உள்ள உறவு ரத்த உறவு
அல்ல. ஆனால் அதைவிட தீவிரமான மானசீகமான உறவு.water is thicker than blood என்று சொல்லத்தோன்றுகிறது
ராஜேந்திரன்