Thursday, November 22, 2018

சிதல்வடிவம்



அன்புள்ள ஜெயமோகன்

துண்டிகனும் அந்த ஆடையும் போர்க்களத்தில் சம்பந்தமில்லாமல் வந்துசெல்வதுபோலத் தோன்றினாலும் அந்தப்போரின் அர்த்தம் என்ன என்ற கேள்வியை மிக ஆக்ரோஷமாக கேட்டுவிடுகின்றன.

துண்டிகனுக்கு அந்த ஆடைபோலத்தான் அரசர்களுக்கு நாடு. அர்ஜுனன்போன்றவர்களுக்குக் கொள்கை. கடைசியில் சிதல் அவற்றுக்கெல்லாம் ஒரு நகல்வடிவத்தைத்தான் உண்டுபண்ணுகிறது என சொல்கிறது வெண்முரசு.

இந்த காட்சி கண்ணிலேயே நிற்கிறது. ஏனென்றால் நானே பார்த்திருக்கிறேன். கரையான் அரித்த பெட்டிகள் பெட்டிபோலவே கண்ணுக்குப்படும். தொட்டதுமே உதிர ஆரம்பிக்கும்

எனக்குச் சங்கடமான சில எண்ணங்கள். கிருஷ்ணன் சொல்லும் நான்காம்வேதமும் அதைப்போலத்தானா? வெறும் சிதல்வடிவம்தான் இன்றைக்கு எஞ்சியிருக்கிறதா என்ன?

செல்வா