அன்புள்ள ஜெ
வெண்முரசின் சிறுகதைகளின் ஒன்று விந்தனின் இறப்பு. தம்பியின் சாவுக்குப்பின் அவன் வாழ்க்கையே அர்த்தமில்லாமலாகிவிடுகிறது. சாவுதான் அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது. சாவுக்காக அலைமோதுகிறான். தேடித்தேடிச் செல்கிறான். அப்போது சாவு அவனுடன் விளையாடுகிறது. சரி போ என்று அவனை விட்டுவிடுகிறது. அவன் திரும்பிவிடலாமென்று நினைக்கும்போது வந்து கவ்வுகிறது.
எலியை வைத்து பூனை விளையாடுவதைபோல அந்தக்களத்தில் மனிதர்களிடம் சாவு விளையாடிக்கொண்டிருப்பதை அந்தக்கதையில் காணமுடிந்தது
ஜெயராமன்