Thursday, November 8, 2018

வசுக்கள்

வெண்முரசின் கட்டமைப்பு

ஜெ

ஒரு கட்டுரையில் பீஷ்மர் எட்டு முறை வில்தாழ்த்துவது அவருடைய குடித்தெய்வங்களை ஒவ்வொருவராக இழப்பதுதான் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அஷ்டவசுக்கள் என்பவர்கள் எட்டு பிரபஞ்ச சக்திகள். தரன் [பூமி] சோமன் [வானத்திலுள்ள அமுதம்] துருவன் [வானத்தின் மையம்] அனலன் [தீ] அனிலன் [காற்று] ஆபன் [தண்ணீர்] பிரத்யூஷன் [சூரியன்] பிரபாசன் [வானம்] ஆகியவர்கள் அவர்கள். அந்த உலகசக்திகள் பீஷ்மரைக் கைவிடுவதைத்தானே இந்த நாவல் குறிக்கிறது?

ரகுநாதன்