Monday, September 15, 2014

கிருஷ்ண துளசி




இனிய ஜெயம்

இன்றைய அத்யாயத்தின் [காத்திருத்தல்] துவக்கமே அந்த அத்யாயத்தின்  சாரத்தில் துவங்கி விட்டது.

விதைகோடி உறங்கும் வெண்பாலை நிலம் நான். விரிந்து வான் மூடிய வெறும்நீலப் பெருவெளி நீ. கருக்கொள்ளா அன்னையின் முலைததும்பும் அமுதம் நான்.


இங்கே மீண்டும் பீஷ்மர். அவர் பாலை நிலத்தில் கை அள்ளும்  விதையில் காண்பது  ஒரு இயற்கையின் ஒழுங்கு. ஆச்சர்யம். அறிதல்.


ராதை  அறிவதோ ஏக்கம்.   அடுமனை எரிக்குள்  ஆயிரம் முறை புகுந்து வெளி வரும் தவிப்பு அது என்ன? வெறும் பகல் கனவா? அதற்கு என்னதான் சாரம்.?
இந்த அத்யாயம் உள்ளே புகுந்து என்னவோ செய்கிறது.

இனிய ஜெயம் தண் துழாய்  எனில் பொருள் என்ன?

சீனு


அன்புள்ள சீனு


துழாய் என்றால் துளசி. தண் துழாய் நீலத்துளசி . கிருஷ்ணதுளசி என்றும் சொல்லப்படும்

ஜெ 

மலர்கள்