Monday, September 15, 2014

காலடிகள்



ஜெயமோகன் சார்

நீலம் ஆரம்பத்திலிருந்தே எந்த ஒருஅத்தியாயத்தையும் முழுமையாக வாசிக்க முடியவில்லை.இதற்குமுன் முதற்கனலோ, மழைப்பாடலோ வண்ணக்கடலோ இப்படியிருந்ததில்லை. அத்னால் அதனோடொன்றமுடியாமல், மீண்டும் வண்ணக்கடலையே படிக்க ஆரம்பித்தேன். 


56 ம் அத்தியாயம். பறவையை வீழ்த்த சொன்ன கிருபரிடம் கர்ணன் அம்பும்  ஒரு பறவை என்கிறான். அம்பு என்றால் என்ன என்று கேட்ட அக்னிவேசரிடம் அது ஒரு புல் என்கிறார் துரோணர்.  சாகும் தருவாயிலே அது உண்மை என உணர்கிறார் அவர். அம்பு என்றால் என்ன என்று கேட்ட துரோணரிடம்அது ஒரு சொல் என்கிறான் அர்ச்சுனன். அதை அவர் ஸ்வர்ணையின் சொற்கள் மூலம் உணர்ந்திருப்பாரோ அல்லது  இறந்தது அஸ்வத்தாமன் “என்கிற யானை”  என்ற சொற்களின் போது ஆறிவாரோ...அதை எண்ணிக்கொண்டிந்தேன்..

 சனிக்கிழமை மழைப்பாடல் செம்பதிப்பு இரண்டு பாகங்களாய் வந்து சேர்ந்தது. 

மழைப்பாடலை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன்.. புத்தகமாய் வாசிக்கும்போது இருக்கும் வசதிகள் தனி..எனக்கு இரவு வேலை.. பகலில் தூக்கம்.. ( அதேதான்.. நாய் சங்கிலி ;-) )  week end என்பதால் இரவில் தூக்கமெல்லாம் வராது.. அதுவும் வசதிதான்.. சமையலறையில் லைட் போட்டுகொண்டால் யாருக்க்ம் தொல்லையில்லை...  வசுமதி காந்தாரம் விட்டு புகுந்த வீடு செல்லும் வரை வாசிக்க முடிந்தது.. அத்ற்குள் எத்தனை அனுபவங்கள்...பீஷ்மர் மணம் பேச விதுரன் ஒப்புக்கொள்ள வைக்கும் அரசியலோ.. அதை திருதராஷ்டிரண் சாதிக்கும் விதமோ.. பீஷ்மர்.. திருதராஷ்டிரனின் மன நெகிழ்வோ.. ( நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே? ) 


ஏதோ ஒன்றுடன் உறங்கச்சென்றேன். காலையில் ( அதாவது மதியம் 12:00 மணி) விழிப்பு வந்ததிலிருந்து.. நீலம் படிக்க வேண்டும் என்றே தோன்றியது...பல் தேய்த்து விட்டு படிக்க ஆரம்பித்தேன்...முதலிரண்டு அத்தியாயங்கள் படித்து முடித்ததும்  நீலம் பற்றிய கடிதங்களை படித்தேன்.. அதன் போக்கு புரிந்தது..  இனி முழுமையாக நீலம் மட்டுமே வாசிக்க வேண்டும்... 12:30 க்கு என் மகளை school-ல் லிருந்து கூட்டி வர பெட்ரூம் கதவை திறந்தேன்.. ஹாலில் க்ருஷ்ணன் பாதங்கள்... இன்று ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரம் என்று அம்மாவும் மனைவியும்மும்முராமாக இட்டுக்கொண்டிருந்தார்கள்.



காளிபிரசாத்