ஜெ
ஆரம்பம் தொட்டே நீலம் ஒரு வகையான அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் ராதையின் காதலின் நெகிழ்ச்சியும் பரவசமும் ஒரு தரிச்னமாக ஓடுகிறது. அது முழுக்க அழகு நிறைந்தது. அங்கே துயரமும் அழகுதான்
மறுபக்கம் அதை தலைக்கீழாக ஆக்கும் ஒரு தரிசனம். கொலை. ரத்தம். பாவம். குரூரமனா இமேஜ் கள்.இரண்டும் ஒரே புளியை நோக்கி போகின்றன என்று தோன்றியது
சென்ற அத்தியாயத்தி ராதை குழலிசையின் பெருங்கருணையை கண்டுகொள்கிறார். இந்த அத்தியாயத்திலே அக்ரூரர் அதன் கொல்லும் குரூரத்தை கண்டுகொள்கிறார்
கொன்றுண்டது அன்னம். கொலையுண்டது அன்னம். உண்டு வளர்ந்தது அன்னம். உணவாகி வளர்ந்தது அன்னம். அன்னமயம் இப்பிரபஞ்சம். அன்னமே பரம்பொருள்.
வெல்லும் குழல். வலியுணரா குழல். கொல்லும் குழல். கருணையிலா குழல். கண்ணன் குழல். கருஞ்சுழியெனச் சுழிக்கும் கரியோன் கைக்குழல். அழிக்கும் குழல். அனைத்தையும் உண்டு சிரிக்கும் தழல்.
போன்ற வரிகள்
இரக்கமற்றது இசை. இரக்கமேயற்றவன் அதிலாடும் இளையோன்.
என்ற முத்தாய்ப்பில் முடிந்தபோது ஒரு கிளாசிக் அனுபவம் ஏற்பட்டது. மிகச்சரியானபடி சமநிலைப்படுத்தப்பட்ட ஒரு படைப்பு
சுவாமி