ஜெ
இன்றைய அத்தியாயத்தில் முத்தம் விஸ்வரூபம் கொண்டிருக்கிறது. ஒரு கணமாகவும் ஒரு நீண்ட வாழ்க்கையாகவும் முத்தம் மாறுகிறது.
முத்தம் நிகழும் வர்ணனைகள்
எரிமீன் மண்புதைகிறது. மலரிதழ் நிலம்சேர்கிறது
புல்வெளி மீது புரவிக் குளம்புகள்.
பாலைமண் அறியும் பனிமணித் துளிகள்.
மழைவிழும் மலரிதழ். தவளை தாவிய தளிரிலை.
அலைஎழும் கடல்முனை. ஆழி நுரைதவழ் மணல்கரை
முத்தம் அளிக்கும் மனநிலைகள்
இதழ்கவ்வும் இதழறியும் மென்மை இதழ்மென்மையாகுமா? என் நாவறியும் சொல் எவர் சொல்லென்று சொல்லலாகுமா
என்று விரிந்து செல்லும் சொற்சித்திரம் அந்த முத்தம் டிவைனான ஒன்று எர்த்லியான ஒன்றை தொடும் தருணமாக மாறி ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவமாக ஆகிறது
நானில்லை இவனில்லை என்றால் எவ்வெளியில் நிகழும் இந்த இன்கனிவாய் தித்திப்பு?
இவனை இங்கே நான் படைத்து உண்கிறேன்
சுவாமி