Tuesday, September 16, 2014

உதிர்தல்

நதிக்கரையில் தலைசாய்த்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருக்கிறேன். என் நெற்றிமேல் உதிர்ந்த மலரை ஏறிட்டு நோக்கினேன். எத்தனை நாள் காத்திருந்தாய் இறுதிப்பற்றும் அழிவதற்கு? 









மெய் சிலிர்த்து மேனி எழுந்த சிறுமலர்ப்பந்து. வண்ணமும் வாசமும் எஞ்சிய செம்பொற் குவளை








கண்புதைக்கிறது கருவிளை





கனலணைகிறது காந்தள்






எரிவிண்மீன் என உதிர்கிறது பலாசம்.




எங்கும் குருதியென வழிகிறது செம்மல்



உதிர்ந்த மலர்களின் துயரால் பூசைசெய்யப்படுபவள் இப்புவியரசி.




மலர்கள் 

இந்திரகோபம்

துளசி