Sunday, September 21, 2014

முத்தின் தூய்மை




ஜெ

நீலம் 32ல் முத்தம் பற்றிய வர்ணனைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அதன் தாளம் காரணஆக வாசித்து ஓடிவிடுவார்கள். நின்றுவாசித்தால் விரிந்தபடியே செல்கிறது

மலர் மண்சேர்வது மாதிரி மென்மையாக
எரிவிண்மீன் மாதிரி வன்மையாக

மண்மேல் புரவிக்குளம்புகள் மாதிரி தொட்டுத்தொட்டுத்தாவி
ஆலங்கட்டி மழைமாதிரி ஒட்டுமொத்தமாக தழுவி

மலரை நிறைக்கும் மழைமாதிரி பொழிந்து
தவளை தொட்டு தாவிய இலை மாதிரி ஒற்றை முத்தமாக

அலைவந்து அறையும் கடல்முனை மாதிரி ஆக்ரோஷமாக
நுரை தழுவும் கடற்கரை மாதிரி மென்மையா

மாறிமாறி முத்தம். முத்தம் போல காமத்தில் முக்கியமானது ஒன்றும் இல்லை என்ற எண்ணம் வந்தது. உடல்கலப்பதற்கெல்லாம் குழந்தைப்பெறு மாதிரியான காரணங்கள் உள்ளன. ஆகவே அவை ‘கலப்படம்’ உடையவை. முத்தம்தான் தூய்மையான காமம்

சரண்