Sunday, September 21, 2014

மது,அருண்,சாம்

அன்புள்ள ஆசிரியருக்கு 

யமுனைப்பாலையில் உலவும் ராதை ஒரு உச்சம் என்றால் கம்சனின் முழுமை இன்னொரு அற்புதமான உச்சம். 

துபாய் சரவணகுமாரின் கடிதமும் உங்கள் பதிலும் இன்று தான் புரிந்தது. சில சமயம் தும்பியையும் ஒரு மலரிலிருந்து இன்னொன்றுக்கு தள்ளி விட muse-கள் தேவைப்படுகின்றன போல !

யோசித்துப்பார்த்தால் ஒரு விதமான 'கம்சத்தனமான' நிலையிலேயே நானும் இருக்கிறேன். 

உடல்நிலை சரியில்லாத போது இலக்கியம் படிப்பது ஒரு தனி அனுபவம். நீலம் நான் கொதிக்கும் மத்தகத்துடன் உலவும் காடு. இந்த உலகை உருவாக்கி அளிப்பதற்கு நன்றி

மது 






அன்புள்ள ஜெமோ



ராதையை ஆரம்பம் முதல் வாசித்துக்கொண்டு வருகிறேன். நேற்றைய அத்தியாயத்திலே ஒரு புரிதல் வந்ததும் அதிர்ந்துவிட்டேன். காமமும் காதலும் கலந்த களியாட்டத்தை நான் ஆணாக நின்று புரிந்துகொள்ளவில்லை. பெண்ணாக நின்று புரிந்துகொள்கிரேன். இதுவரை இப்படி ஆனதே இல்லை. ஆகும் என்று நினைத்ததும் இல்லை

இது ஏன் என்று யோசித்தேன். ஆரம்பத்தில் நீங்கள் ராதையை மட்டும் காட்டினீர்கள். அவள் கண்ணனை குழந்தையாக கொஞ்சுவதை காட்டினீர்கள்  அப்படியே கொண்டுவந்து காதலியாக நிறுத்திவிட்டீர்கள். குழந்தையைக் கொன்சும் ராதையுடன் அடையாளம் காண முடிந்தது. அப்படியே வந்து ராதையை கண்ணன் கொஞ்சும்போது ராதையாக நின்றுவிட்டேன்

வ்விதழ் கொண்ட செம்மை. இச்சிறு தோள் கொண்ட மென்மை. இடைகொண்ட வளைவு. இடைகொண்ட கரவு. இவையாவும் எனக்காக நீ பூண்ட அணியல்லவா?

என்று வாசித்தபோது அய்யய்யோ என்று உணர்ந்து மீண்டுவந்தேன். புனைவு உருவாக்ககும் மாயத்தில் இத்தனை தீவிரமாக இருந்ததே கிடையாது

அருண்

ஜெ சார்

வரதி வேலவதி என்று இரு பெண்கள் வருகிறார்களே அவர்கள் யார்? ராதையின் தோழிகளா இல்லை உருவகங்களா?

சாம்

அன்புள்ள சாம்

விப்ரலப்தை என்பது அஷ்டநாயிகா என்னும் உருவகத்தில் ஒன்று. ஊடி நிற்கும் நாயகி. நம்மூர் மருதத் திணை. அதற்குரிய ராகங்கள் அவை

ஜெ