Thursday, September 25, 2014

வாடாமலர்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

எந்த சொல்லையும் காமத்தில் ஆரம்பித்து, சிரிக்கவைத்து, காமத்தில் முடித்து, பெரும் பொருளில் கனியாக்கும் சில மூதன்னையர்களைக் கண்டு உள்ளேன்.

யார் அந்த முது அன்னையர்கள்? தொட்டாச்சிணுங்கிப்போல, சீ. என்று சிலுங்கிய பாலியத்தின் கைப்பாவைகளாய் இருந்தவர்கள்தான் அவர்களும். அவர்கள் எப்படி இப்படி ஒரு கனியானார்கள் என்று ஆச்சரியமுடனே அவர்கள் கவி முகம் நோக்குவேன். எத்தனை வரிகள்! ஒரு பனி கனியான அதிசயம் அது.

பாலம்பிகை, சுந்தராம்பிகை, தையல்நாயகி, பெரியநாயகி, ஞானம்பிகை என்ற இந்த  வளர் அடுக்கு வரிசையில் மாகாளியாகவும் அகிலாண்ட கோடியை ஈன்ற அன்னை இருக்கின்றாள். ஆயிரம் பாதங்கள் ஆயிரம் கைகள் கொண்டு உள்ளாள். இருந்த இடமிருந்து வெகுதூரம் ஓடுபவளாக. வெகுதூரத்தில் இருந்தாலும் ஓரிடத்தில் குவியும் விதையாகவும் அன்னையாடும் ஆட்டம்தான் பெரிது. ஆனால் அப்பன் ஆட்டநாயகன் என்று பெயர் பெருவதுதான் அதிசயம். ராதை விளையாடும் பெரும்வெளி அதிகம் அதிசயம். கண்ணன்தான் தீராதவிளையாட்டுப்பிள்ளை என்று பெயர் பெற்று உள்ளான். உண்மையில் கண்ணன் //கண்ணன் வெறும் களிப்பாவைகன்னியர் ஆடும் அம்மானைஎன்றான்நகைத்து என் உந்திக்குழியில் முகம்புதைத்துக்கொண்டான்//

ஆட்டம் பெரிதா? ஆடுகளம்பெரிதா? என்று திகைக்கின்றேன் இன்று.

கண்ணனை பரத்தையன் என்றும், தோழியரை நாணமில்லாதவள் என்றும் எண்ணி சினந்து, பகைத்து, கண்ணீர்விட்ட சிறுபாலம்பிகைாயாக இருந்த ராதைதான் இன்று ஞானாம்பிகைாயாக இருக்கின்றாள்.

//அப்பால் ஒரு செண்பகத்தின் பின்னிருந்து லலிதை எழுந்து வந்தாள்அவளுக்கு அப்பால் விசாகையும்சுசித்ரையும் வந்தனர்சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் வந்தனர்கண்ணுக்குத்தெரியாதநீர்ப்பெருக்கில் ஒழுகிவரும் மலர்க்குவைகள் என வந்து சூழ்ந்தனர் கோபியர்குழலாடி நிலவாடி குளிராடிநின்றனர்நீலமலர் ஒன்று அல்லிக்குளம் நடுவே பொலிந்தது//

காமத்தில்  உச்சமறிந்து ராதை என்றும் கண்ணன் என்றும் இரண்டல்ல எல்லாம் அர்த்தநாரித்தோற்றம். ஐந்து காம்புள்ள பால்மடிக்கொண்ட காளை தன் நிழலைத்தான் புணர்கின்றது என்பதை அறிந்து ஞானாம்பிகையான ராதை விருத்தாம்பிகையாக உயந்து நிற்கின்றாள். இனி அவள் வாயில் இருந்து வழியும் காமம்சொட்டும் சொல்லெல்லாம் ஞானம்சொட்டும் சொற்கள்.

எகிப்திய நண்பன் ஒருவன் ஒரு நாள் சேவல் பேடையை அணைவதுபோல என்றான், பேடை குறுகி சிலிர்த்து எழுந்து இறகு சிலிர்க்கும் அதுபோல் என்றான்.//நீர் விழுந்தணைந்த எரிதழல் போல நின்றஇடத்தில் குறுகி மறைந்தாள்வெண்புகையென எழுந்தாள்வெட்கி வளைந்தாடினாள்இளங்காற்றில்இல்லை எனக் கரைந்தழிந்தாள்//

மாகாளி எல்லையில் நின்றுவிட சிவகாமசுந்தரி அருகுவந்து ஆடல்கண்டு ரசிக்கிறாள். //ஆயிரம்பல்லாயிரம் கோடி இதழ்கள் விரிந்து என்னைச்சூழ்ந்தன என்னை ஆக்கிய எல்லாம்//

நீலம்-36
ராஸலீலை
விருந்தாவனத்தில் முடிந்துவிட்டது
மனதில்... .
பூ உதிர்ந்த பின்புப்பார்த்தால்
பூவிருந்த இடத்தில் 
வாடாமலர்கள். 

நன்றி 

அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.