அன்புள்ள திரு.ஜெ வணக்கம்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலில் தீது.
”என் சொல்லை நம்பி எழுவோர் இப்பாதத் தடம் தொடர்க!” என்று நடந்தான்.
கண்ணன் சொல் பிழைத்திருந்தால் பயன் இல்லாத சொல் சொன்னவனாக இருந்திருப்பான். பயனில்லாத சொல் சொன்னவனாக இருந்து இருந்தாலும் வள்ளுவர் சொல்லவதுபோல நண்பர்களுக்கு அறமில்லாதவற்றை செய்தவன்போல ஆகி இருப்பான். கண்ணனை சுற்றமும் நட்பாக கொல்லாதவர்கள் யார்தான் மண்ணில் உண்டு. மண்ணுக்கே நலம் செய்தது கண்ணன் சொல் என்றால். எனது சிந்தனையில் இன்று கோவர்த்தனம் மலை என்ற பிம்பத்தில் இருந்து மறைந்து சொல்லாகி நிற்கின்றது.
கண்ணன் தனது சொல்லை தூக்கி நிறுத்தி அந்த சொல்லுக்கடையில் வந்து சேர்ந்த உயிர் அணைத்தையும் காத்தான் என்றுப்படுகின்றது. காலம் காலமாக 4000ம் வருடங்களாலாக மண்ணில் புழுதியும் உயிர்குருதியும் கொண்டு ஓடிய பெருவெள்ளத்தில் இருந்து மக்களை காக்க தனது சொல்லையே குடையாக கோவர்தனமாகக் கண்ணன் பிடித்தான் என்று தெரிகின்றது.
//மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும்வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்!” என்றான். ”என் சொல்லைநம்பி எழுவோர் இப்பாதத் தடம் தொடர்க!” என்று நடந்தான். அக்கணமே யசோதை தன் ஆக்களுடன் பின் எழுந்தாள்.ஆய்ச்சியர் கூட்டம் அவள் காலடியில் கால்வைத்துச் செல்ல ஆயர்களும் அவ்வழியே தொடர்ந்தனர். மலைச்சரிவில்ஏறி மேடு நோக்கிச் சென்றனர்.//
பண் ஒன்றையே பலியாக்கொண்டு அருளும் வெண்கடலோன் அருள் என்திலிருந்து சொல்தான் பூ, சொல்தான் உணவு, சொல்தான் குடை, சொல்தான் கோட்டை, சொல்லதான் மலை, சொல்தான் மனிதனும் தெய்வமும் குடியிருக்கும் கோயில்.
சொல்லற்ற மனிதர்களிடம், இடியாய், தீயாய் விளையாடும் ஆளும் வர்கங்களால் கண்ணீரில் விழும் மானிடர்கள் இடையே சொல்லையே குடையாய், படகாய் கொண்டுவந்து கரைசேர்க்கின்றான் கண்ணன். புலத்திய முனிவருடன் பழகி பழுத்த சொல் ஒன்று கண்ணனுக்காக காளந்தி நதியல் காத்திருந்கின்றது என்ற படிமத்தில் சொல்லாத சொல்லெல்லாம் வந்து என்னை மூழ்கடித்து செல்கின்றது.
//மலையன் சொல்லும் மழலை கேட்டு மனம் களித்தார். அவன் சிறுமார்பு நனைத்திழியும் அருவிதொட்டுகுளிர்ந்தார்//
அவன் சிறுமார்பு நனைத்திழியும் அருவிதொட்டு குளிர்ந்தார் என்ற சொற்களில் உலகில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளையும் பார்த்தாலும் அந்த காட்சி திகட்டாத இனிப்பைத்தருகின்றது.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராம.மாணிக்கவேல்