வணக்கம் ஜெ,
வெண்முரசு
விவாதங்கள் தளத்தில் வெளிவரும் கடிதங்களை நான் முதலில் அதிகமாகக் கவனித்துப்
படிக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்து உள்ளே வந்துவிட்டேன்.
இப்போது
நீலம் வாசிக்கும்போது உடனே இந்தக் கடிதங்களையும் வாசிக்கிறேன். முக்கியமாக இங்கே
வெளிவரும் ஏராளமான படங்கள்
அதேமாதிரி
பூக்கள், அஷ்டநாயிகா படங்கள், நீலக்குருவிபடம்
எல்லாம் நீலத்தைப்புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமானவை
இன்றைய
கடிதங்களை வாசித்தபிறகுதான் இந்த வரி என்னை கவர்ந்தது. இத அர்த்தம் நான் சாதாரணமாக
வாசித்திருந்தால் வந்திருககது
கன்றென்றும் காளையென்றும்
கண்மயக்கு
காட்டி அங்கே நின்றான்.
களிறோ கருமுகிலோ என
அழிந்தது
கன்னியர் நெஞ்சம்
சாதாரணமாக வாசித்துப்போயிருப்பேன். கிருஷ்ணன் நின்றதை அரண்மனைப்
பெண்கள் ரசித்துப்பார்த்தார்கள். அதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று
மட்டும்தான் தோன்றும். ஆனால் திரு
சுவாமி அவர்களின் கடிதத்தை வாசித்தபோது பெரிய ஒரு திறப்பு ஏற்பட்டது. கண்ணன் ஒருபக்கம்
வாள் மாதிரியும் இன்னொருபக்கம் மலர் மாதிரியும் இருப்பதைத்தான் அவர் சொல்கிறார் என்று
புரித்து
இந்த
வரியில் விளையாட்டுக் கன்றுகுட்டியாக ஒரு கோணத்திலே தோன்றுகிறான். வேரு ஒரு கோணத்தில்
வலிமையான காளையாகத் தெரிகிறான். ஒரு கோணத்திலே உறுதியான யானையாகத் தெரிகிறான். இன்னொரு
கோணத்த்லே கருமுகில் மாதிரி மென்மையாகத் தெரிகிறான். அதை ‘கண்மயக்கு’ என்ற சொல்லில்
சொல்லியிருக்கிறீர்கள். அழகான வார்த்தை
அழகான படங்கள். கிருஷ்ணன் வாயில் இருந்து தீ வர நிற்கும் படமும் கிருஷ்ணனை வசுதேவரும் தேவகியும் கொஞ்சும் படமும் மிக அற்புதமானவை.
நன்றி
பிரபாகர்
அன்புள்ள ஜெ
இந்த அத்தியாயம் முழுக்க ஒரே சமயம் கிருஷ்ணன் குழந்தையாகவும் தண்டிக்கின்ற கருணை இல்லாத தெய்வமாகவும் தோற்றமளிக்கிறான் என்பது பற்றித்தான். ஒரே ரத்தம்தான் அவன் உடம்பிலே. அது வசுதேவனுக்கு பயம் தருகிறது. ஆனால் தேவகிக்கு அவள் பிரசவித்த குழந்தையின் உடலிலே இருந்த ரத்தமாகவே தெரிகிறது
ஒவ்வொரு வரியாக வாசிக்கும்படி ஒரு நாவலை எழுதியிருக்கிறீர்கள் ஜெ
அருணா சுப்ரமணியம்