Wednesday, September 24, 2014

தெய்வமாதல்

ஜெ

இன்றைய நீலம் 35 ஸ்வாதீனஃபர்த்ருகை. கூடலும் கூடல் நிமித்தமும் கொண்ட குறிஞ்சி நிலம். நேற்று வந்த அத்தியாயங்களை வைத்து இதை ஓர் அதீத நிலையிலே கொஞ்சம் எதிர்பார்த்திருந்தேன் )). ஆனால் கவித்துவமாக மிள எளிமையாக அதை தாண்டிச்சென்றுவிட்டீர்கள்




கண்ணனை மொய்த்து முத்தமிடும் அந்த சிவந்த பட்டாம்பூச்சியும், சிவந்த அலகுகள் கொண்ட இரு வெள்ளைப்புறாக்களும், மென்மையான அன்னத்தூவியும் எல்லாம் கிளாஸ். கற்பனையில் விரியும் குறிஞ்சி மிக அழகானது.

ண்ணச் சிறகசைத்துச் சொல்லும் ஒரு சொல் வானிலேற்றி நிறுத்தும் வகை அறிந்தது.  அந்த வண்ணத்துப்பூச்சி இல்லையா? அஞ்சி அலகுபுதைத்த அணித்தூவல் புறாக்கள் அவன் கன்னக்கதுப்பில் அலகு தீட்டுவது அழகு. இந்த இடத்தை மட்டும் பலமுறை மீண்டும் மீண்டும் வாசித்தேன்

ஆனால் இங்கிருந்து திடீரென்று வேறெங்கோ செல்லத்தொடங்கியது நீலம். தெய்வம் வந்து ஒரு பெண்ணை தெய்வமாக்குகிறது. பதினாறு வகை பணிவிடைகள். 1 இருக்கை கொடுத்தல், 2 கை கால்கழுவுதல் 3 நீர்தருதல், 4 குடிநீர் அளித்தல், 5 நீராட்டுதல், 6  ஆடைசார்த்துதல்,7 முப்புரி நூல் அளித்தல், 8 சந்தனம் பூசுதல், 9 மலர்சார்த்துதல்,10 அட்சதை தூவுதல், 11 தூபம் காட்டுதல், 12 தீபம் காட்டுதல், 13 குங்கிலியம் ஏற்றுதல், 14தாம்பூலம் அளித்தல், 15 அமுதப்படையல்,16 மந்திர அர்ச்சனை . ஒவ்வொன்றாய் செய்து கண்னன் அவளை பீடத்தில் தெய்வமாக நிறுத்துகிறான்

ராதை கண்ணனுக்கு அருள் செய்கிறாள். அற்புதம். ராதா ராணியை  புஷ்டிமார்க்கிகள் திருவின் வடிவமாகவே வழிபடுகிறார்கள். கொட்டிக்கொட்டி குளவியாக்கிய கதைதான்

சுவாமி