Thursday, September 18, 2014

முக்கோணம்



மதிகண்ட ஒன்று. மனம் கண்ட ஒன்று, புலன்கண்ட ஒன்று,   மூன்றும் கண்டது ஒன்றாக இருந்தாலும் மூன்றும் ஒன்றையே வேறுவேறுவேறாகக்கண்டு, வேறுவேறு இல்லாத ஒன்றாக ஆகும் ஒரு தருணத்தில் வாசகன் அகம் மட்டும் காணும் ஒன்றாய் இன்று நீலம்-30 உள்ளது.

நந்தகோபன் கண்ணனைக் காண்பது ஒருகோணம்
யசோதகை கண்ணனைக் காண்பது ஒருகோணம்
அக்ரூரர் கண்ணனைக் காண்பது ஒருகோணம்  

முக்கோணங்களும் ஒரே வழியால் ஒரேவிழியால் காண்வில்லை என்பதுதான் இன்யை தரிசனம். அற்புதமாக உள்ளது ஜெ.

கண்ணனின் கால்பட்டு ஒளிக்கொண்ட சக்கரங்கள் சுழன்று பெருவெளி அடைத்துபோகும் சகடத்தை கண்டு, அதன்மூலம் ஆயிரம் இதழ்தாமரை  மலர, ஒவ்வொரு இதழின் நுனியிலும் வைரமணிஒளியாய் கண்ணன் நின்றதை தரிசனாமாய் கண்டவன் நந்தன். அவன் பிரம்ம ஞானத்தரிசனம் கண்டவன். கண்ணன் ஒரு உடல் அல்ல அவன் பிரமம் என்று கண்டு உள்ளான். கண்ணனை வெட்ட முடியாது. எரிக்கமுடியாது. நனைக்கமுடியாது, உலர்த்தவும் முடியாது அழிக்கமுடியாது என்பதை நந்தன் நன்றாக உணர்ந்து உள்ளான். கண்ணன் அவன் தந்தை நந்தனுக்கு தந்தது மனோன்மணி தரிசனம். அதை ஆயர்குலம் அறிந்து இருக்கவில்லை. இன்று அதை அக்ரூரர் நந்தனின் விழியில் விழி தைத்து அறிகின்றார்.

கண்ணனை மதிஒளி பூக்கவிரிந்த ஞானமலராய் கண்டவன் நந்தன் அதனால்தான் அவனால் அப்படி நடக்க முடிகின்றது. அக்ரூரர்போல, ஆயர்பாடி மக்கள் போல வாசகன் நெஞ்சம் நடுங்கத்தான் செய்கின்றது நந்தனின் வாய் வார்த்தைக்கேட்டு. //நந்தன் கைதூக்கி “நான் ஒன்று சொல்லவேண்டும் மூத்தோரேஎன் மைந்தன் மதுரைபுகட்டும்கம்சனை களம் காணட்டும்” என்றான்மூச்சொலியும் இதழ்பிரியும் ஒலியும் எஞ்சிய அவையை விழிகளால்சுற்றி நோக்கி மீண்டு “நீ சொல்வதென்ன என்று சூழ்ந்துளாயா?” என்றேன். “ஆம்சொல் எண்ணி பொருள் எண்ணிகாலம் கருதி இதை உரைக்கின்றேன்கரியோன் களம் காணட்டும்” என்றான்.
நூறு குரல்கள் எழுந்து மன்றாடினகைவீசி எழுந்து நந்தன் முன்நின்று கூவினர்நான் அவன் கண்களில் கண் தைத்துஅமர்ந்திருந்தேன்வைர ஒளிகொண்ட விழிகளை நோக்கி “உன் நெஞ்சம் உறுதிகொண்டிருக்கிறது என்றால்அவ்வண்ணமே ஆகுக” என்றேன். “ஆம்இது ஊழின் வழிவருவதெல்லாம் வகுத்த வல்லோனின் நெறி” என்றான்நந்தன்//

நந்தகோபன் கண்ணனைக்கண்டது பரபிரம்மா ஞானத்தரிசனம்  
இவன் துணிக்க ஒண்ணான் எரிக்க ஒண்ணாதான்
இவன் நனைக்க வற்ற ஒணான் ஏதும் – இவன் நித்தன்
எங்கும் உளன் தாணு இயல்பால் சனாதனன்
தங்கும் அசலனே தான்-பகவான் ஸ்ரீரமணரின் கீதாச்சாரம்.
அன்னை மனத்தால் ஆனவள், கண்டது கேட்டது தொட்டது முகர்ந்தது, உண்டது எல்லாம் அவளுக்கு மனதுக்கு சென்றுதான் மதிக்கு செல்லும் மதி முடிவெடுக்கும் முன்னமே அவள் மனம் முடிவெடுத்து விடும். அது சரியா? தவறா? காலம் தீர்மானிக்கும். எதுவும் அவளுக்கு பொருட்டு அல்ல. அவள் உள் உணர்ச்சி, மனவன்பு கடவுளையும், விதியையும் நியதியையும் கைட்டி நிற்க வைத்துவிடும். அன்னை யசோதை கண்ணனுடன் மனதால் இணைந்து உள்ளால். அவன் மண்ணுண்டபோது அதில் புவிகண்டபோதும் அவன் அவள் குழந்தை மட்டும், அவன் மருதமரம் உதைத்து அவளுக்கு இருந்த இருளும் ஒளியும் அழித்தபோதும் அவன் மகன் மட்டும், இந்திரன் பகைவந்தபோது அவன் சொல்கொண்டு கோவர்தனகிரிக்கு முன்நடந்தபோதும் அவன் மகன் மட்டும். அவளுக்குள்   அவன் யார்? ஏன் வந்தான் எதற்கு வந்தான்? என்ன என்ன செய்கின்றான்? என்ன என்ன சொல்கிறான்  எப்படி இருப்பான்? எல்லா கேள்வியும் அவளுக்குள் எழுந்தாலும் அவளை அறிவை நோக்கி இழுத்தாலும் அவள் அத்தனையும் இழுத்து மனத்துத்துக்குள்போட்டு மூடி அதன்மேல் ஏறி அன்னையாக நிற்கின்றாள். தனம் என்னம் பாற்கடல் சுமந்து கனிந்து நிற்கும் அன்னைபசுவாக மட்டும் நிற்கின்றாள். அன்னைகள் பிள்ளையை மனத்தால்மட்டும் பார்க்கிறார்கள்.
//நுரையணிந்த பால்குடம்போல் நிறைவெழுந்த முகம் கொண்டோள்இனியேதும் எய்தவுண்டோ இவ்வுலகில்என்னும் அன்னையரின் ஆணவத்தை அணியெனப் பூண்டோள். “அன்னையே உன் மகனை அழைத்துச்செல்லவந்தவன் நான்இன்னும் இளஞ்சிறுவன்அவன் எதிர்கொள்ளும் மன்னனோ பெருவலியன்நான் ஏதும்செய்யவொண்ணேன்நெறியேதோ அதில் நிற்பேன்என் மேல் உன் சொல்விழலாகாது’ என்றேன்.
யசோதை புன்னகைத்தாள். “கண்ணன் அங்கு வந்து கம்சனின் சிரம் கொள்வான்அவன் ஆற்றவொண்ணாதசெயலேதும் இல்லை இப்புவிமீதில்” என்றாள். “என் மகன் என வந்தான்இம்மடியில் தவழ்ந்தான்இப்புவி எண்ணும்கதையுளான்என்றும் அழியா சொல்லுளான்.”//

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்டத் தாய்-திருக்குறள்.
ஈன்றபொழுதில் உவக்கும் உள்ளம்தான் அவன் சான்றோன் எனும்போதும் உவக்கின்றது.தாயிடம் எந்நத மாற்றமும் இல்லை. பிறந்தபோது தந்தையின் உள்ளம் உவந்தாலும் சான்றோன் என்னும்போது அவன் உள்ளத்திலும் முந்தி அறிவு எப்படி? அப்படியா? என்ற கேள்வியோடே உவக்கின்றது.   
யசோதை கண்ணனிடம் காண்டது பிரபிரம்ம கிருஷ்ணதரிசனம்

பிறப்பாால் இடத்தால் வாழ்க்கையால் குலத்தால் நித்தம் நித்தம் காமக்குரோத மோகத்தில் மூழ்கும் புலன்கொண்டு வாழ்ந்த அக்ரூரர். நந்தன் மகன் கண்ணனைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று கண்ணனைப்பற்றி நினைத்திருப்பார். அறிவும் அறியாது அவன் யார் என்று? மனமும் அறியாது அவன் யார் என்று? இன்றுதான் முதன் முதலில் கண்ணனைக்காண வருகின்றார். அவர் அறிவு அவர்கற்ற நூலில் கண்டுண்டு கிடக்கிறது. அவர் மனம் அவர் வாழ்ந்த உலகின் பெரும் குருதியில் துளிச்துளி இன்ப மழைநீரில் நினைந்து இருக்கின்றது. அதற்கும்மேல் அவர் பெற்ற இன்பம் எதுவும் இல்லை. கையில் அள்ளியதில் வழிந்ததுபோக நகத்தில் தொக்கி நிற்கும் துளிதான் அவர் கண்டது. அதுவும் தொடும்முன் ஆவியாகி இருந்த இடம்தெரியாமல் இந்தது என்ற கனவில் ஆழத்தில் அவரைத்தள்ளிவிட்டுப்போனதுதான். இன்று கண்ணனை காண அவர் செல்லும்போது. வானம் பூமி முழுவதும் ஆனந்த பெரும்வெள்ளம்  பரவி அவரை ஆழ்த்தி நான் இருந்தேன் என்ற நிலையையும் அழித்து அந்த ஆனந்தமே தானாகி நிற்கின்றார். புலன் அழிந்து உடல் அழிந்து உணர்வழிந்து உயிரழிந்து போகும் பெரும் தற்கொலைத்தருணம் அது.
//யாழென்றேயான கருவண்டுகுழலென்றேயான குயில்இசையென்றே ஆகி அங்கிருந்தான் இளையோன்.பண்ணொன்றே ஆகி பரந்திருந்தது வானம்பாழென்றே ஆகி நிறைந்திருந்தது காலம்பூவென்றே ஆகி சூழ்ந்திருந்ததுகாடுஅங்கே நானென்ற ஒன்றிலாது நின்றிருந்தேன்அக்கணம் நானறிந்தேன் நம் உடலாகி வந்தது ஒரு சுரமென்று.வானத்து கங்கையென வழிந்தோடும் பெரும்பெருக்கில் சுழித்த ஒரு சுருதியில் தெறித்த ஒரு சிறு துளியெனஅங்கிருந்தேன்குழல் மீது நடமிட்டன இப்புடவியைத் தொட்டாடும் கைகள்துளைமோதி எழுந்தது காலத்தைஆளும் மூச்சுபெரும்புயலில் கொடித்துணிபோல் நெளிந்தன மலைமுடிகள்அலையெழுந்து அமைந்தது திசைவரைநீண்ட நிலம்தொடுவான் சுவர் விளிம்பில் வந்தமர்ந்தது ஒரு நீலமணிப்பறவை//

இசையென்றே ஆகி நின்ற கண்ணனைக்கண்ட அக்ரூரர் நானென்ற ஒன்றில்லாது நின்று இருந்தேன் என்கின்றார். நூல்கொண்டு, கோல்கொண்டு, வாள்கொண்டு கம்சனை வெல்லமுடியாமல் இன்று கம்சன் சொல்கொண்டு வந்த அக்ரூரர் நந்தகோபன் சொல்லால் வருந்துகின்றார். ஒரு குழந்தையை பலிக்கொடுக்க விதி தன் கைபிடித்து அழைத்துச் செல்கின்றதே என்ற  தவிக்கின்றார். இரண்டு மக்களுக்கு தந்தையாகி இருக்கும் அவர், ஒரு தாயின்தான் கண்ணீர்சொல் தனது குலத்தை சுட்டுவிடக்கூடாதே என்று தவிக்கின்றார். அந்த அக்ரூரர்தான் கண்ணனைக்கண்டபின்பு நானென்று ஒன்றில்லாது நின்று இருந்தேன் என்கின்றார். எத்தனைப்பெரிய கொடுமையான தருணத்தில் நிற்கும் அக்ரூரருக்கு கண்ணன் தரும் தரிசம் ஆனந்தம்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.-திருக்குள்.

அக்ரூரர் கண்ணனிடம் கண்டது பரபிரம்ம சச்சிதானந்ததரிசனம்.
முக்கோணங்களும் சேர்ந்த ஒன்றுதான் அந்த கண்ணன் என்னும் முக்கோணம் என்றாலும், அது ஒரே வழியால் ஒரேவிழியால் காண்வில்லை என்பதுதான் இன்யை தரிசனம். அற்புதமாக உள்ளது ஜெ.

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.