Friday, September 26, 2014

இமையமலர்




ஜெ

முப்பத்தேழு அத்தியாயம், எப்படிப்பார்த்தாலும் 300 பக்கம் நீலம் வந்திருக்கிறது. அதில் கால்வாசி கண்ணன் வர்ணனைதான். குழந்தையாக மைந்தனாக காதலாக. இனி ஏதேனும் சொல்ல இருக்குமா என்று ஒவ்வொரு அத்தியாயம் நிறைவடைந்ததும் நினைப்பேன். திரும்பத்திரும்ப வந்தது நீலன் கரியோன் என்ற வார்த்தைகள்தான். எல்லா உவமைகளும் வர்ணனைகளும் புதியவை. இனி அவ்வளவுதான் என்று நினைத்தேன். இன்றைக்கு முடியும்போது பார்த்தே

மலையடுக்கே இதழ்களென மலர்ந்த இமயம். 
மது பெருகும் காளிந்தி


ஒருநிமிடம் பிரமித்தே போனேன். இமைய மலைமடிப்புகள் மலர்களின் இதழ்களைப்போல ஆன பிரம்மாண்டமான மலர். நான் பலமுறை காத்மண்டு யாத்திரையில் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான நீலப்பூ மாதிரித்தான் இருக்கும். இளநீலநிறம் மட்டும் இல்லை. டிசம்பரில் நல்ல கருநீல நிறமே வரும். இதென்ன பூ  மாதிரி இருக்கிறது என்று பலமுறை நினைத்திருக்கிறேன். [ஜெட் விமானத்தில் போனால் பார்க்கமுடியாது. அலையலையாக தெரியும். சின்ன டகோடா மாதிரியான விமானத்திலோ ஹெலிகாப்டரிலோ போகவேண்டும்]

காளிந்தி தேனாக மாறியது என்பதும் அதற்கிணையான பிரம்மாண்டம் . அந்த பெரிய மலரில் இருந்து தேன் அப்படித்தானே வரமுடியும்

வைத்தியநாதன்



ஜெ சார்

இன்றைய நீலத்தில் கண்ணனை தேவகி காணும் இடம் ஒரு அபாரமன உணர்ச்சிக்கட்டம். பிறந்த கணமே அவள் கைவிட்டு போன குழந்தை அதேபோல ரத்தம் தோய்ந்து கல்லில் இருந்து பிறந்து வருகிறது.

அக்கணம் பிறந்தவளாய் உணர்ந்தாள். அழிந்த வருடங்களை மீளப்பெற்றாள். அன்னையென கன்னியென சிறுமியென குழவியென ஆகி அவன் கையிரண்டில் தவழ்ந்தாள். “என் தேவா!” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி?” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா? அடிவாங்கி அழுவாய் நீ” என்றாள். 


 ஆனால் பெச ஆரம்பித்ததுமே அது அவளுக்கு அப்பா மாதிரி ஆகிவிடுகிறது.அ வளிடம் விளையாடும் காளையாக நிற்கிறது. அந்த இடத்தை வாசித்ததும் மனம் உணர்ச்சிவேகத்தில் நின்றிவிட்டது

கருணாகரன்