அன்புள்ள ஜெ
ஆரம்பத்திலே கொஞ்சநேரம்
திகைப்பு. கதை எங்கே நடக்கிறது என்று . ராதையின் பிரேமை தொடங்குவதற்கு முன்பே
கதையைக் கொண்டுசெல்கிறீர்களோ , என்ன இது சரியாக இல்லியே என்று நினைத்தேன்.
கீர்த்திதைபேரும் அதற்குப் பொருத்தமாக இருந்த்து
ஆனால் அன்ங்கமஞ்சரி என்று
வந்ததுமே தெரிந்த்து. இது ராதையின் தங்கையின் பேத்தி என்று. அற்புதமான விஷயம்.
எனக்கே இந்த அனுபவம் உண்டு. நான் ஊருக்குப்போனபோது என் நினைவிலே அழியாமல் இருந்த
பாலியகால சினேகிதியைப்பார்த்தேன். ஆறாம் வகுப்பிலே அவள் செத்துவிட்டாள். ஆனால் அதே
வயசில் அதேமாதிரி விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் தங்கச்சியின் மகள். ஒரு பெரிய
ஜெர்க் அது.
குட்டிராதையை அதிகம்
சொல்லாமலேயே சொல்லிவிட்டீர்கள். காலையிலே அவள் பூப்பூவாய் பூப்பதே ஒரு பெரிய
விஷுவல் கவிதை மாதிரி இருக்கிறது. அவள் கையிலே பால் வாங்கிக்குடிக்கிறது
பாரிஜாதம். அவள் நீலக்கடம்பிலே ஏறிவிளையாடுகிறாள்.பர்சானபுரியின் ராதை என்று அவளையும்
சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மரம்
நின்ற மயிலே இறங்கு கீழே” என்றார் மலர் பெய்து உடல் நனைந்த முதியவர் ஒருவர். கண்சுருக்கம் நெளிய
கனிந்த நகைப்புடன் “பர்சானபுரியின் பிச்சியல்லவா நீ?”
என்றார்.
யமுனைக்கரையில்
யாதவர்தம் அரசி யின் முன் கிருஷ்ணன் நின்று
வாசிக்கிறான் என்பது அற்புதமான வரி
மணிகண்டன்