Saturday, September 13, 2014

அங்கிருந்து இங்குவரை



ஜெ

இன்றைய வெண்முரசில் கோவர்த்தனம் எடுத்து கண்ணன் ஆடும் நடனத்தை அதைக் கண்டு பாணனின் சொல் ஆடிய நடனம் வழியாகவே சொல்லிவிட்டீர்கள். 

கடுவெளியே காரிருளே என்று அங்கிருந்து ஆரம்பித்தி குறைத்து கொண்டேவந்து கலம் நிறைத்து அமுதூட்ட கடிந்தொரு மொழிசொல்ல கைநிறைத்து தாலாட்ட கண்நிறைத்து பார்த்திருக்க கன்னங்கரியோனாகி வருக என்று இந்த எல்லைக்கு கொண்டுவந்து நிறுத்தி கோருவது அற்புதம். கிருஷ்ண பக்தியின் சாரமே இந்த பேதைத்தனம்தான் இல்லையா?

யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல் என்ற வரியைத்தான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்


சுவாமி