சென்ற வார இறுதியில் பவா வீட்டில் நிகழ்ந்த சிறுகதைப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். நண்பர் கடலூர் சீனுவும் இருந்தார். இடைவேளைகளிலும் அமர்வுகள் முடிந்த மாலை வேளைகளிலும் அனேகமாக வெண்முரசுவைப் பற்றியே அதிகமும் நண்பர்கள் பேசுகிறார்கள்.
நீங்கள்
குறிப்பிட்டது போல, நீலம் படித்தவர்கள், அதை ” உணர்திருக்கிறார்கள்”
என்பது பேச்சிலிருந்து தெரிந்தது. வந்ததில் பலர் அறிமுக வாசகர்கள்,
ஆனால் நீலத்தின் கவிதை நடை எந்த தடையும் இல்லாமல்
அவர்களை சென்றடைந்துள்ளது என்னை வியக்க வைக்கிறது.
இரவின்
தனிமையில் மின்னல் தீற்றும் தெடுவானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது
ஒன்றை உணர்ந்தேன். பக்தியில் பாகவதம், இசையில் ஜெயதேவர் அஷ்டபதி என்றால்
நவீன இலக்கியத்தில் ” நீலம் ” அதை அடைந்திருக்கிறது.
பின் குறிப்பு
ஆர்வத்தைத்
தூண்டிய இன்னொரு விஷயம், மகாபாரத கதைகளைக் எடுத்துக்காட்டாக கூறும் வாசக
நண்பர்கள், அவை வெண்முரசில் எவ்வாறு வரும் என்று பார்க்க குழந்தையின்
ஆவலுடன் இருக்கிறார்கள். இலக்கியத்தில் ஒரு
மௌனப்புரட்சி !
கே.பி.வினோத்