Wednesday, September 24, 2014

அர்த்தநாரி





ஜெ

இன்றைய வெண்முரசு நீலம் 36 ஆம் பகுதியில் அர்த்தநாரீ பாவம் பற்றிச் சொன்னதுபோல வருகிறது. அல்லது அது என்னுடைய மனக்கற்பனையா?

மார்பான திரு. இடம் எடுத்த பாதி. சொல் வாழும் நா. தெய்வம் அறிந்த முழுமை. எரிகுளம் நிறைய எழுந்தது தென்சுடர்

என்ற இடத்தை வாசித்தபோது அந்த எண்ணம் ஏற்பட்ட்து. பெருமாளின் மார்பில் லட்சுமி மாதிரி. சிவனின் இடப்பக்கத்தில் பார்வதி மாதிரி. பிரம்மனின் நாக்கில் சொல் வடிவில் சரஸ்வதி மாதிரி ராதை கண்ணனில் அமைந்தாள். சரியாகத்தான் வாசிக்கிறேனா?

சிவக்குமார் சுப்ரமணியம்


அன்புள்ள சிவக்குமார்

மிகச்சரியாகத்தான். சரிதான், வாசிப்பு பற்றிய கவலையே தேவையில்லை போல. தமிழில் வேறெந்த எழுத்தாளருக்கும் இந்த வாசிப்பும் அமைந்திருக்காது

அம்மையப்ன் –அர்த்தநாரி என்ற கருத்துரு நம்முடைய மத்த்தின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்துவது.


ஜெ