Thursday, September 18, 2014

ராதையின் துயரம்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இது கணேஷ் பஹ்ரைனிலிருந்து,

கடந்த சில நாட்களாக நீலம் தன்னுடைய  துயரத்தின் அழகியலை நல்கிக்கொண்டிருக்கிறது.

இதை நாங்கள் படிக்கும் போதே ராதையின் துயரத்தின் மலரிதழ் வருடுகிறது என்றால், எழுதும் தங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என எண்ணும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.

அந்த துயரத்தின் படிமவெளியில் மலர்கள் உதிர்வது, மரங்கள் உதிர்ந்து யமுனையில் செல்வது, யமுனையே வற்றி சிறு குளங்கள் ஆவதும் பின் பாலையாவதும் ஒரு சோக காவியத்தை கண் முன்னே நிகழ்த்தி காட்டுகிறது.

தன்னை விட பத்து வயது கூடிய ராதைக்கு ஏன் இந்த அளவிற்கு கண்ணன் துயரத்தை தர வேண்டும்? அந்த அபிமன்யூ செய்த பாவமென்ன? அல்லது முடிவிலா காலப் பெருவெளியில் அதுதான் அவர்களின் விதியா?

கேள்விகள் பல எழுகின்றன.

ஏற்கனவே சிலர் கூறியது போல வரம் வாங்கி வந்தவர்தான் தாங்கள். இந்த தன்னிகரில்லா பெருநாவல் தொகுப்பை எழுதும் போதே படிப்பது எங்களின் நல்லூழ். வேறென்ன சொல்ல?


அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்.