Friday, September 26, 2014

தெய்வம் என்பது



ஜெ ,

இன்றைய நீலம் பலவகையிலும் பின் தொடரும் நிழலின் குரலை நினைவுபடுத்தியபடியே இருந்தது. பல விஷயங்கள் பொதுவாக இருந்தன. குழந்தைகள் கொலை செய்யப்படுவது முக்கியமாக. ஏரொது மன்னன் கிறிஸ்துவைக் கொல்ல குழந்தைகளைக் கொலைசெய்தான் என்கிற கதை மிகவும் பிரபலம். இங்கிருந்து அங்கே சென்றதா அங்கிருந்து இங்கே வந்ததா என்று தெரியவில்லை.

செய்யவேகூடாத, செய்வதை விட சாவதே மேல் என்று சொல்லப்படவேண்டிய சில விஷய்ங்கள் மானுட வாழ்க்கையில் உண்டு. அதிகாரம் கோடபாடு  மதம் சாமி எதற்காகவும் அதையெல்லம செய்துவ்ட கூடாது என்று இநத இருபகுதிகளும் சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது

பின் தொடரும் நிழலின் குரலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் முன்னால் நின்று ஏசு சொல்கிறார் நீதிக்காக உங்களை சிரச்சேதம் செய்துகொள்ளுங்கள் நீதிக்காக உங்களை தேசப்பிரஷ்டம் செய்துகொள்ளுங்கள்.ஏனென்றால் நீதி என் தந்தையின் ஆணையாக உள்ளது. மண்ணில் மனிதரின் கடமையாக உள்ளது [நினைவில் இருந்து எழுதுகிறேன்]

அதையேதான் கிருஷ்ணனும் சொல்கிறார்.  நாநிலம் அறிக! நான்கு வேதங்கள் அறிக! நன்றும் தீதும் முயங்கும். வெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்.

இந்தக்குரலில் உள்ள certainty தான் தெய்வம் என்று நினைத்துக்கொண்டேன்

கண்ணன்

அன்புள்ள கண்ணன்

நடராஜ குருவின் ஒரு மேற்கோள் உண்டு. நிலையின்மையை மட்டுமே ஒருவன் உள்ளும் புறமும் சாதாரணமாகப் பார்க்கமுடியும். ஆனால் அந்த நிலையின்மையை அவன் அறிவது ஆழமான ஒரு நிலைப்புள்ளியால்தான். மாறும் பிரபஞ்சத்தில் மாறாமலிருப்பது என அவன் உணரும் அதுவே கடவுள் என்பது


ஜெ