Friday, September 26, 2014

இரண்டு கிருஷ்ணர்கள்

ஜெ,

இன்றைய அத்தியாயத்தை பலமுறை வாசித்தேன். முதலில் ஒரு பதற்றம்தான் இருந்தது. ஆகவே கூர்மையாக வாசிக்கவில்லை. வாசித்தபின் கடிதங்களை வாசித்தேன். அதன்பின் மீண்டும் வாசித்தேன். புதிய வெளிச்சங்கள் கிடைத்தன

அற்புதமான படங்கள். எங்கே எடுக்கிறீர்கள்?. சிலபடங்கள் ரியலிஸ்டிக் ஆனவை. சில படங்கள் அலங்காரமாகவும் சில படங்கள் சுவரொவியங்கள் மாதிரியும் உள்ளன

சிவராஜ்



அன்புள்ள சிவராஜ்

பெரும்பாலான படங்கள் இஸ்கான் [ஹரே கிருஷ்ண இயக்கம்] அமைப்பினரால் வரையப்பட்டவை. அவர்கள் கிருஷ்ணரை ஒரு சர்வதேச தெய்வ உருவமாகக் கொண்டுசெல்லமுயல்கிறார்கல். ஆகவே தேர்ந்த ஓவியர்களைக்கொண்டு ஐரோப்பியபாணி ஓவியங்களை உருவாக்குகிறார்கள்

மற்ற ஓவியங்கள் ராஜஸ்தான் சிற்றோவிய மரபைச் சேர்ந்தவை

ஜெ



அன்புள்ள ஜெ

நீலம் வாசித்த போதையில் இருக்கிறேன். வெறும் வார்த்தைகள் இப்படி ஒரு அற்புதமான உலகத்துக்குக் கொண்டுசென்று நிறுத்தும் என்று நம்பவே முடியவில்லை.

இன்றைய பகுதியை மறுபடி வாசித்தபோதுதான் வசுதேவனுக்கும் கிருஷ்ணனுக்குமான உறவின் சில அம்சங்கள் பிடிகிடைத்தன. பழைய மழைப்பாடலில் வரும் வசுதேவனுடம் இதை சம்பந்தப்படுத்திக்கொண்டலதான் புரியும். அதில் வசுதேவன் கம்சனின் அரசை அவன் ஆட்சிசெய்வதைப்பற்றி கற்பனைசெய்கிறான். தேவகியை கல்யாணம் செய்யும்போதுகூட அந்தத் திட்டம் இருந்திருக்கலாம்

அந்த ஆசை பெரிய பாவம். அதைச்செய்தவன் ரத்ததிலே கை நனைத்தவந்தான். அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார்

எந்தையே, அக்குருதியில் அகம் தொட்டவர் நீங்கள். அவன் அமர்ந்த அரியணையில் ஒருகணமேனும் அமர்ந்திருக்கிறீர்கள்” 

அதைப்புரிந்துகொண்டால் கிருஷ்ணர் 

அவ்வாறெனில் இக்கணமே கோல்துறந்து களமிறங்கி என் முன் நில்லுங்கள். உங்கள் நெஞ்சுபிளந்த குருதிபூசி அவ்வரியணை அமர்ந்து நான் ஆணையிடுகிறேன்” 
புரிர்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்

நன்றி ஜெ

மகாதேவன்