[குந்தி கதகளியில்]
ஜெ ,
பிரயாகை ஒரு கறார்த்தன்மையுடன் இருப்பதனாலேயே கூர்மையான பென்சிலால் வரைந்தது போல இருக்கின்றன நிகழ்ச்சிகள். குந்தியை கவனித்துக்கொண்டே இருந்தேன். ஆரம்பம் முதலே அவளுக்கு ஒரு குறிப்பிட்ட நிறத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தீர்கள். அவளுக்கு ஒரு தன் முனைப்பு இருக்கிறது. அதுதான் அவளுடைய ஆளுமையின் அடிப்படை
நான் குந்தி சௌவீர நாட்டின் மணிமுடியைச் சூடியதும் தேரில் தலை நிமிர்ந்து போகும் இடத்தை வாசித்ததும் உடனே நினைத்துக்கொண்டது அவள் முதலில் அறிமுகமாகும் இடம். அதாவது சின்னப்பெண்ணாக அவளை குந்திபோஜனின் மார்த்திகாவதிக்கு தத்துக்கொடுப்பதாகப் பேசுகிறார்கள். சூரசேனர் மாட்டேன் என்று சொல்லி அவளிடம் மறுத்துவிடும்படி சொல்கிறார். அவள் மேடை ஏறி நின்று நான் குந்திபோஜனிடம் போகிறேன் என்று சொல்லிவிட்டாள்
அன்றைக்கு அவளை அப்படிச் சொல்லவைத்தது என்ன? அவளுக்கு யாதவப்பெண்ணாக இருக்கப் பிடிக்கவில்லை. இளவரசி ஆக நினைக்கிறாள். அந்த அடிப்படையான வேகம் அவளுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் அவளை படிப்படியாக கொண்டு செல்கிறது. இப்போது சௌவீர நாட்டின் முடி கிடைத்ததுமே அதை வைத்துக்கொள்பவள் அந்த குந்திதான்.
அந்த அடிப்படை அவளுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அவள் காதலியாக இருக்கவில்லை. இருந்திருந்தால் சல்யனுக்கு மாலைசூடி இருப்பாள். அந்த சுயம்வரத்தில் அவள் பாண்டுவுக்கு மாலை சூடியதே அவன் அஸ்தினபுரியின் அரசன் என்பதனால்தானே?
முதலில் அப்பாவை பிறகு காதலனை தூக்கி வீசுகிறாள். அரசபதவிக்காக. அந்த அதிகாரத்துக்காக எல்லாவற்றையும் துறக்கிறாள். அந்த அதிகார ஆசையை தருமன் அடையாளம் கண்டுகொள்கிறான். அதை நிறைவேற்ற நினைக்கிறான். அது மோசமான பக்கவிளைவை உருவாக்கிவிட்டது
சிவராம்