Friday, January 16, 2015

இரும்பு வில்



இரும்பு வில் வளையுமா நாணை இழுத்தால் வளையாத வில்லை வைத்து எப்படி அம்பு எய்வது. இரும்பு அம்புகள் தான் உள்ளதாக km ganguly translated மகாபாரதத்தில் படித்தேன். இரும்பு வில் பற்றி எதில் உள்ளது சிறிது குறிப்புகள் குடுக்க முடியுமா

கோபி நாத்

அன்புள்ள கோபிநாத்,

பொதுவாக தகவல்களை நான் சொல்லிக்கொண்டிருந்தால் எழுத முடியாது. வாசகர்களே தேடி அடையவேண்டியதுதான்

நீங்கள் புதியவாசகர் என்பதனால் இக்குறிப்பு. ஒன்று, இரும்பு மிக நன்றாகவே வளையும். இரண்டு அக்காலத்தில் மிகச்சிக்கலான இயந்திர அமைப்புள்ள விற்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்

மகாபாரதம் ஆதிபர்வம் இருநூறாவது அத்தியாயம் [சுயம்வர பர்வம்] கிந்தூரம் பற்றி பேசுகிறது. அது இரும்பு வில். இரும்பாலான நாண் கொண்டது

இக்காரணத்தால்தான் வில்லை வளைத்து நாண் ஏற்றுவதென்பது மிகப்பெரிய சவாலாக அக்கால நூல்களில் சொல்லப்படுகிறது. மூங்கில் வில்லை வளைப்பது பெரிய சாதனையாக இருக்க வாய்ப்பில்லை

தேரில் ஏறிச்சென்று வில்லை வைத்துப்போரிடும்போது வில்லின் எடை ஒரு பொருட்டல்ல. அவ்வில் நெடுந்தூரம் செல்லும். தேர் வழக்கொழிந்தபோது இந்த பெரிய வில்லும் இல்லாமலாகியது.

ஜெ