Friday, November 9, 2018

சலிப்பு-2



அன்புள்ள ஜெ


சலிப்பு பற்றி ஒரு வாசகர்கடிதம் பார்த்தேன். அப்போதுதான் உண்மையில் நானே அதைக் கவனித்தேன். சலிப்பு எங்கே உள்ளது? வாழ்க்கை முழுக்கவே உள்ளது. அந்தச் சலிப்பால் செயலாற்றுபவர்கள் நெகெட்டிவ் ஆக செயலாற்றுவார்கள். சலிப்பே இல்லாமல் இங்கே விளையாடுபவர்களே ஜெயிக்கிறார்கள்.

கிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் அது வந்துகொண்டே இருக்கிறது. அவன் சகுனியுடன் சூதாடும்போதும் புல்லாங்குழல் வாசிக்கும்போதும் சலிப்பே இல்லாமல் செய்கிறான். அந்த இடங்கள் எல்லாமே இப்போது இந்தப்போருடன் சரியாக வந்து சேர்ந்துகொள்கின்றன. சூது சங்கீதம் போர் எல்லாமே அவனுக்கு ஒன்றுதான் ஏனென்றால் அவன் சதாகோலாகலன். நித்யகல்யாணன்

இந்தவாழ்க்கையே ஒரு சூதும் சங்கீதமும் போரும்தான்

மகாதேவன்