ஜெ
விந்தன் அனுவிந்தனின் கதை ரம்பகுரம்பன்
கதைகளை போல பல கதைகளை நினைவூட்டியது. ஒரு கணம் என்ற சொல்லைத்தான் நான் கவனித்தேன்.
ஒருகணத்தில்தான் விந்தன் மூத்தவராக ஆனார். அந்த ஒருகணத்தையே வாழ்க்கையாக விரித்துக்கொண்டார்.
அந்த ஒரு கணத்தைக் கடக்க அவர் தன் முழு வாழ்க்கையையும் கடந்துசெல்லவேண்டியிருக்கிறது. அந்த பாய்ச்சலை அவர் எபப்டி நிகழ்த்தினார் என்பதுதான் அந்தக்கதையின்
நுட்பம். அவர் எண்ணி செய்யவில்லை. அவருடைய மனதின் ஆழம் அதைச்செய்யவைத்தது. அல்லது அவருடைய
உடல் அதைச்செய்தது. அல்லது அவர்களின் ஊழ் அதைசெய்தது. அது எப்படி நிகழ்கிறது என்ற கணம்
அத்தனை மர்மமானதக இருப்பதனால்தான் அந்த உறவு அவ்வளவு வசீகரமானதாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்
சாரங்கன்